Title: Using Solar Power in Multiple Ways Authors Name: Sir. Kanaga Gnana Language: Tamil
சூரிய ஆற்றலை நாம் பல்வேரு வழிகளில் பயன்படுத்தமுடியும்
காலையில் எழுந்ததும் சூரியனை
வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று. அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும்
கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை!
புவிக்கு வெகு தொலைவில் ,சராசரியாக 1.496 பில்லியன் மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே
சூரியனாகும்.அதில் 73%ஹைட்ரஜன் வாயுக்களும்,25%ஹீலியம் வாயுக்களும்,1%க்கு குறைந்த அணு
நிறை மிகுந்த தனிமங்களும் நிறைந்துள்ளன.
சூரியனானது பலகோடி ஆண்டுகளாக
குளிர்ச்சியடையாமல் 4x1026J/s வேகத்தில் கதிர்வீச்சாற்றலை வெளியிடுகிறது.அதற்கு சூரியனில்
தொடர்ந்து நிகழும் அணுக்கரு இணைவு வினைகளே காரணம். இவ்வினையில், ஹைட்ரஜன் அணுவின்
உட்கருவான 4 புரோட்டான்கள்,சூரியனின் மிகு வெப்ப பகுதியில் ஒன்றிணைந்து ஹீலியம் உட்கரு உருவாகவும்,மிகுந்த
ஆற்றலுடன்கூடிய வெப்பக்கதிர்கள் ஏற்படவும் முழுக்காரணமாகிறது. இத்தொடர்வினையினால்
சூரியன் தன் மேற்பரப்பில் ஏராளமான சூரிய ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பூமியின்
மேற்பரப்பு 174 பெட்டா வாட் (peta
watt ) ஆற்றலை சூரிய ஒளியிலிருந்து
பெறுகிறது.
சூரிய ஆற்றலை நாம்
பல்வேரு வழிகளில் பயன்படுத்தமுடியும் என்றாலும்,அதனை கீழ்கண்ட
இரண்டு வழிகளில்தான் அதிகமாக உபயோகப்படுத்தி வருகிறோம்.
1)சூரிய வெப்ப
ஆற்றல்(Solar thermal energy)
2)சூரிய ஒளி மின்
அழுத்த ஆற்றல்(Solar photo voltaic
energy)
1). சூரிய வெப்ப ஆற்றல்(Solar thermal energy) - நீரை சூடேற்ற,சமையல் செய்ய,பொருட்களை உலரவைக்க, நீரிலிருந்துஉப்பைப் பிரித்தெடுக்க
போன்றவைக்கு சூரிய வெப்ப ஆற்றல் பயன்படுகிறது.. பல கண்ணாடிகள் கொண்டு சூரிய
ஒளியைக் குவித்து சூரிய வெப்ப நீராவி உண்டுபண்ணும் பாரிய மின் பிறப்பாக்கிகள் உண்டு. இவற்றின் சிறப்பு அம்சம் சூரியன் மறைந்த பின்பும் உருக்கப்படட
உப்புக்களில் இருந்து மின்சாரம் பெறலாம்
2) சூரியஒளி மின்
அழுத்த மின் ஆற்றல்(Solar photo voltaic
energy) - சூரிய மின் பலகைகளை சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள்
விழுமாறு அமைப்பதன் மூலம் சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றமுடியும்.
மரபு சார்ந்த எரிபொருள்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது
சுற்றுசூழலைப்பாதிப்பதோடு,எரிபொருள்கள் இருப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது!அத்துடன்
இந்தியாவில் சராசரியாக 250- 300 நாட்கள் சூரிய ஒளி கிடைப்பதால்,சூரிய ஒளியிலிருந்து பெறப்படும்
மின்சார அளவு ஆண்டொன்றிற்கு 500டிரில்லியன் யூனிட் என மதிப்பிடப்படுகிறது.இது நமது மொத்தத்தேவையை
விட மிக அதிகம்.அதனால்,படிப்படியாக நாம் சூரியஒளி மின்சாரம் உற்பத்திக்கு ஆக்கமும்,ஊக்கமும்
கொடுக்கவேண்டும்!
சகாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பாவிற்கு
மின்சாரம்
ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதியிலிருந்து சூரிய ஆற்றல்
மூலம் ஐரோப்பாவிற்கு மின்சாரம் வழங்கும் புதிய திட்டமொன்று குறித்து ஆராயப்பட்டு
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகளும் எரிசக்தி
பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலக நாடுகளில்
ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய சக்தி மூலமான மின்சார
உற்பத்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிய சூரிய கலங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு
மின்சாரத்தை வழங்கும் பாரிய திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி நூற்றுக்கணக்கான வெப்ப ஆலைகள் வட ஆப்பிரிக்க
பாலைவனப் பகுதிகளில் நிறுவப்பட்டு அதன் மூலம் பெறப்படும் ஆற்றல் கடலடி கேபிள்கள்
மூலம் ஐரோப்பாவிற்கு எடுத்துவரப்படும். இத்திட்டம் முடிவடைவதற்கு 40 ஆண்டுகள் செல்லலாம்
என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் எரிசக்தி தேவையின் 15 விழுக்காடு
இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் எனவும் வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய
கிழக்கு நாடுகளும் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுமார் 555 பில்லியன் அமெரிக்க
டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், முன்னணி நிறுவனங்களுக்கு இடையே
ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment