கூகுல் குழுமம் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவரும் இந்த கதை எழுதும் விளையாட்டில் என்னுடன் இணைய முடியும்.
இணைய குழும (கூகுல் குழும) கதைகள் - கதை - ஒன்று
இணைய குழும (கூகுல் குழும) கதைகள் - கதை - ஒன்று
கதை -
ஒன்று
இது என்ன
?
வணக்கத்திற்கு
உரியவன் இறைவன் ஒருவனே.
அனைத்து
தமிழர்களையும் இந்த இழைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி.
உலகம்
முழுவதும் தமிழர்கள் பிரிந்து குழுக்களாக இயங்குகிறார்கள் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.
அனைவரையும்
ஒரு குடையின் கீழ் இயங்கும்
நிலையினை கொண்டு வருதல் வேண்டும்.
இருப்பினும்
, இன்றைய
தேதியில் அது எனது
வேலை அல்ல......
அதை
செய்ய பல முதல் அமைச்சர்களை உருவாக்கி , பல நூறு தலைவர்களை உருவாக்கி மகிழும் தமிழ் உலக மக்கள் அந்த வேலையை ,
இன்னும் அவர்கள் என்ன ________ க்கு செய்யவில்லை ?
என்று அவர்களைத்தான் கேட்கவேண்டும்.
(_____ என்றால் – “எளவு” என்று
என்னால் படிக்க முடிகிறது, நல்லவர்களுக்கு நல்லது மட்டுமே கண்ணில் தெரியும், ஒகே
பாஸ் உங்களுக்கு என்ன தெரிந்தது ?)
இடுக்கண் வருங்கால் நகுக.....
எனது ஒரே தலைவர் , சித்தர். திருவள்ளுவர் சொன்னது இப்போ நமக்கு தேவை பாஸ்.
சரி நகுவோம்.....
எப்படி நகுவது ?
கதை எழுதி நகுவோம்.
புரியவில்லையா ?
இப்போதெல்லாம் நான் பேசுவது நிறைய பேருக்கு
புரிவதே இல்லை (அப்படி என்றால் சீக்கரத்தில் நான் பெரிய ஆளாகப் போகிறேன் என்று பொருள்)
சரி கூகுள் குழுமத்தில் தமிழர்களிடையே என்ன அளவினில் ஒற்றுமை வாழ்கிறது?
இங்கும் நாம், அதே உடைந்த கண்ணாடி நிலையில்தான்
உள்ளோம்....
அனைத்தையும் மாற்றுவது பெரிய வேள்வி....
நிறைய சிந்தனை மாற்றம் நிறைய நிலையில் உருவாக
வேண்டும்....
இப்போதைக்கு ஒன்னு செய்யலாம் என்று
நினைக்கிறேன்....
ஒரு கற்பனை கதை எழுத வாருங்கள்.
மின்தமிழ் – தமிழ்மன்றம் – வல்லமை - தமிழ் உலகம் – தமிழர்பறை – தமிழ் சிறகுகள் - தமிழ் நண்பர்கள் – பண்புடன் – அறிவியல்
தமிழ் மன்றம் ஆகிய பத்து குழுமத்தில்
உள்ளவர்களும் என்னோடு சேர்ந்து இந்த கதையை எழுதலாம்.... மேலும் நம்மை தேடி
வருபவர்களை பின்னாடி விளையாட்டில் சேர்த்துக்கொள்வோம் ...
முகநூளில் உள்ள அறிவியல் தமிழ் மன்றம் - வேர்கள் - தென்றல் காற்று செய்திகள் - ஆனந்த விகடன் - பண்புடன் - தினமணி - World Tamil Organisations (WTO) - general Knowledge - Biomedikal Tamilnadu - Cyber Tamil Sangam ஆகிய ஒன்பது குழுமத்தில் உள்ளவர்களும் என்னோடு சேர்ந்து இந்த கதையை எழுதலாம்.... மேலும் நம்மை தேடி வருபவர்களை பின்னாடி விளையாட்டில் சேர்த்துக்கொள்வோம் ...
விதிமுறைகள் ---
முகநூளில் உள்ள அறிவியல் தமிழ் மன்றம் - வேர்கள் - தென்றல் காற்று செய்திகள் - ஆனந்த விகடன் - பண்புடன் - தினமணி - World Tamil Organisations (WTO) - general Knowledge - Biomedikal Tamilnadu - Cyber Tamil Sangam ஆகிய ஒன்பது குழுமத்தில் உள்ளவர்களும் என்னோடு சேர்ந்து இந்த கதையை எழுதலாம்.... மேலும் நம்மை தேடி வருபவர்களை பின்னாடி விளையாட்டில் சேர்த்துக்கொள்வோம் ...
விதிமுறைகள் ---
௧. ஒன்பது குழுமத்திலும் உள்ள யார்
வேண்டுமானாலும் கதை எழுதும் விளையாட்டில் சேர்ந்துகொள்ளலாம்
௨. ஒரு நேரத்தில் கதையின் ஒரு பகுதியை மட்டுமே
ஒருவர் சேர்க்க வேண்டும்...
௩. ஒரு பகுதி என்பது – அதிகபட்சம் முன்னூறு வார்த்தைகள்
மட்டுமே இருத்தல் வேண்டும்.
௪ . அரசியல் – மதம் – ஜாதி – தனி மனித புகழ்ச்சி, இகழ்ச்சி கூடாது
௪ . அரசியல் – மதம் – ஜாதி – தனி மனித புகழ்ச்சி, இகழ்ச்சி கூடாது
௫ . இங்கு மாணவர், பெரியவர் இப்படி எந்த
பாகுபாடும் இருக்கக் கூடாது.
௬. பல மனிதர்கள் கூடி சிந்தித்து ஒரு கதையை
எழுத முடியும் என்று உலகிற்கு காட்டுவோம்.
௭. டாக்டர். செம்மல் என்றழைக்கப்படும் நானே
இந்த கதையின் தலைமை ஆசிரியர். ஆகையினால் யாராவது கள்ள ஆட்டம் ஆடினால் விளையாட்டில்
இருந்து அந்த நபரை தள்ளிவிடுவேன்.
௮. தலைமை ஆசிரியர் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
ஓகேவா பாஸ்.
ஸ்டார்ட் மியூசிக்......
கூகுல் குழும கதைகள்
கதை – ஒன்று
தலைப்பு – ஏழாவது அத்தியாயம் வரும்பொழுது
கதையின் போக்கினை மையப்படுத்தி அதுபோது விளையாட்டில் உள்ளவர்கள் இதனை
தீர்மானிப்பார்கள்.
அத்தியாயம் – 1 - பகுதி – 1
- Dr.Semmal naalayatamil@gmail.com
ariviyaltamilmandram@googlegroups.com - 31 August 2013 12:30 India , Chennai
36 Words in Total
கும்பகோணத்துக்கு
அருகில் உள்ள தனது கிராமத்தில் இருந்து
சென்னை விமான நிலையம் வந்து சேர ரகுநாத்துக்கு அநேகமாக ஒரு முழு பகல் பொழுது
ஆகியது, தனது கிராமத்தில் உள்ள
அனைத்து விளக்குகளையும் விட அதிகமாக இந்த ஒரு இடத்தில் மாலை நான்கு மணிக்கே எரிவதை கண்டு வயிறு எரிந்தான் ரகுநாத்.
அத்தியாயம் – 1 - பகுதி – 2 - Selvan Kovai holyape@gmail.com
tamizhsiragugal@googlegroups.com - 31 August 2013 12:30 – USA - 468 வார்த்தைகள் இணைய,
கதையின் தற்போதய நீளம் 504 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
வயிறு எரிந்த ரகுநாத் தனது தாகத்தை தணிக்க ஏதேனும் குளிர்பானம்
பருக எண்ணி விமானநிலையத்தில் இருந்த கடைக்கு சென்றார், ரொம்ப
சின்ன கடைதான் அது, கடையின் வாயிலில் கடையின் பெயர் சத்தியமாக
தமிழில் எழுதப்படவில்லை, உள்ளிருக்கும் அனைத்து பொருள்களும்
பார்க்கவே விசித்திரமாக இருந்தன, முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு
தெரியும் – இதுவே ரகுநாதின் முதல் விமான பயணம்.
மெதுவாக கடையின் அருகே சென்றார் ரகுநாத், அய்யா
என்று அழைத்தார் – உள்ளே இருந்து மஞ்சள் நிற டீ சர்ட் , மஞ்சள்
நிற பேண்ட் மற்றும் தொப்பி அணிந்த ஒரு இளம் பெண் வெளியில் வந்தார்.
Sir
how can I help u ? அந்த
பெண் இவரை பார்த்து புன்னகையுடன் கேட்டார்.
குடிக்க தண்ணீர் இருக்காமா ?
, sir. You mean water ?
ஆம் தண்ணீர் வேண்டும்.
அறுபது ரூபா கொடுங்க சார் ......
இல்லமா, வெறும் தண்ணீர்தான்
கேட்கிறேன்..... அதுக்கு ஏன் அறுபது ருபாய்.
சார் இது சிறப்பான தண்ணீர்... அதனாலதான் ....
இறைவன் படைத்த தண்ணீர் போதுமம்மா....
சாதாரண தண்ணீர் போதும்.
சார், ஏன் புரிந்துகொள்ள மாட்டீர்களா....
எந்த ஊர் சார் நீங்க ?
கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமம்.
இப்போ எங்க சார் போறீங்க ?
ஆம்ஸ்ட்ர்டாம்
சார், விசா இருக்கா ?
ஏமா பொண்ணு. என்ன கொழுப்பா ?,
ஆம்ஸ்ட்ர்டாம் என்றால் என்ன பெரிய சந்திரமண்டலமா ?
என்ன பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது ?
முதல்ல, யதார்த்தமா வாழ கத்துக்கோ தாயீ.
நீ தொப்பி , டி சர்ட் , பேண்ட்
அணிந்து நிற்பதால் அமெரிக்க பெண்ணாக ஆகிவிட முடியாது.
இந்த வெட்டி பந்தாவேல்லாம் உன்னோடு வைத்துக்கொள்.
உன்னோட தண்ணியே வேணாம்....
பெரிய இவளுக இவளுக.....
என்று கத்திவிட்டு வேகமாக இடத்தை விட்டு நகர்ந்தார் ரகு.
கடைசியில் கழிவறையின் வாயிலில் இருந்த குழாயில் தண்ணீர்
பருகினார் ரகு.
கடையில் நின்று அமைதியாக இதை பார்த்து, “வந்துட்டானுங்க கிராமத்தான் இவனெல்லாம் ஐரோப்பிய சென்று என்ன
செய்வான்... மெண்டல்”, என்று முனங்கினாள் அந்த பெண்.
குடித்து முடித்ததும் சென்னை எங்கும் பவர் கட் ஆகி எல்லா
விளக்குகளும் அணைந்துவிட்டன. "இத்தனை லைட்டு இருந்து என்ன சார் பிரயோஜனம்? கரண்டு வேணுமில்ல? இப்பல்லாம் அடிக்கடி கரண்டு கட்டு
ஆகுது சார்" என அருகில் நின்ற ஒருவர் கூறினார். .
"என்னது அடிக்கடி கரண்டு கட்டு
ஆகுதா? கும்பகோணத்துல கரண்டே கிடையாது. வெறுத்துபோயி
பீஸ்கட்டையை பிடுங்கு வெச்சுட்டு உக்காந்திருக்கோம். எங்க கிட்ட சென்னை பவர் கட்டை
பத்தி பேசுனீங்க..கடுப்பாயிடுவேன் ஆமா"
அடுத்து செக்யூரிட்டி செக் இன்னுக்குள் போனார்
"ஷூவை களட்டி அந்த பேஸ்கட்டுல வைங்க
சார்"
"நீங்க இப்படி எல்லாம்
சொல்லுவீங்கன்னு தெரிஞ்சுதான் நான் செருப்பே போடலை. வெறும் கால்ல
வந்திருக்கேன்" என சொல்லி அவனை கடுப்பேறினார் ரகுநாத்
"வெறும்கால்ல எப்படியா
ஆம்ஸ்ட்ர்டாம் போற?
அங்கே குளிர்ல உறைஞ்சே செத்து போயிடுவ"
"அட போய்யா..நான் வெறும்கால்ல
நடந்து கையிலாய யாத்திரை போனவன். ஆம்ஸ்டர்டாம் அதை விட குளிரா?"
"வெயீல் காலத்துல போயிருப்பய்யா.
இப்ப டிசம்பர்.ஆம்ஸ்டர்டாம் ரொம்ப குளிரு..
சரி எக்கேடோ கெடு.
எங்கே பாஸ்போர்ட்?"
பாஸ்போர்ட்டை பார்த்த செயூரிட்டி அலறினார்
"என்னது..டிப்ளமாடிக் பாஸ்போர்ட்டா? நீங்க , வந்து, உங்களை,நான்ன்.."
"டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட்னா என்னது?"
"மினிஸ்டர், தூதர் எல்லாம் வெச்சிருக்கும்
ஸ்பெசல் பாஸ்போர்ட். இதே தெரியலைன்னா அப்ப இது உங்க பாஸ்போர்ட் கிடையாதா?"
"என்னுதுதான்..நான் தான்
ஆம்ஸ்டர்டாமுக்கான இந்திய தூதர்.ஆனால் எனக்கு இந்த இங்கிலீஸ் எல்லாம் அவ்ளவா
தெரியாது. டிப்ளமாட் அது, இதுன்னு இங்கிலீஸ் வார்த்தையா சொல்லி கன்பியூஸ் பண்ண கூடாது"
"இங்கிலீஸ் தெரியாத தூதரை
ஆம்ஸ்டர்டாமுக்கு யாரு அனுப்புவா?"
"எனக்கு ஆம்ஸ்டர்டாமிஷ் மொழி நல்லா
தெரியுமே?"
"அட அப்படியா...இப்படி ஒரு மொழியை
நான் கேள்விபட்டதே கிடையாதே? எங்கே அதுல ஒண்ணு ரெண்டு வார்த்தை சொல்லுங்களேன்"
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி
துப்பார்க்கு துப்பாய தூவும் மழை"
"ஆஹா சூப்பர்..சூப்பர். கிட்டத்தட்ட
நம்ம தமிழ் மாதிரியே இருக்கு. உங்களை பார்த்தால் அவ்ளோ எளிமையா இருக்கீங்க.
செருப்பு கூட போடாம கும்பகோணத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு ஒரு தூதர்.
காமராஜருக்கு அடுத்து எளிமைன்னா அது நீங்கதான். உங்களுக்கு எதுக்கு செக்யூரிட்டி
செக் இன்..பெட்டியை நானே எடுத்துகிட்டு வந்து பிளைட் ஏத்தி விடறேன்."
வேண்டாம் சார், கொஞ்சம்
இருங்க ." என்ற ரகுநாத் "திருப்பதி பிரசாதம்" என சொல்லி பெட்டியில்
இருந்த நாமத்தை எடுத்து காவலர் நெற்றியில் இட்டார். மீதியை ஒரு காகிதத்தில் வைத்து
அவரது கையில் திணித்தார்.
அத்தியாயம் – 1 - பகுதி – 3
- Dr.Semmal naalayatamil@gmail.com
ariviyaltamilmandram@googlegroups.com - 31 August 2013 India
, Chennai - 256 வார்த்தைகள் இணைய,
கதையின் தற்போதய நீளம் 760 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
விமானத்தின் அருகினில் செல்லும் பொழுது , ஒரு
கை ரகுவின் தோளில் பட்டது – சார் நீங்கள் கொண்டுவந்த மஞ்சள்
நிற கைப்பையை வைடிங் லாஞ்சில் உள்ள நான்காவது மேஜையின் கீழே வைத்துவிட்டு
உங்களுடைய சூட்கேஸை எடுத்துக்கொள்ளவும்.
அந்த பொண்ண ஏன் சார் அப்படி திட்னீங்க, பாவம்
அழுவுற மாதிர ஆயிட்டா அவ.
மிஸ்டர். வின்சென்ட், அந்த கடையின் அருகில் ஒரு பச்சை
நிற சட்டை அணிந்தவர் இருந்ததை கவனித்தீர்களா ?
அவர் யார்னு தெரியுமா ?
எனக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.
அதனால்தான் ஒரு நிகழ்வை ஏற்படுத்தினேன்
நம்மை போன்ற இந்திய அரசின் மிக முக்கிய பதவியில் உள்ளவர்கள் செய்வது பலருக்கு
எளிதில் புரியாது
புரியாத வரைதான் நமக்கு மரியாதை பாஸ்.
“ஆபரேஷன் ரகு துவங்கிவிட்டது” என்று
உளவுத்துறை அதிகாரியிடம் அறிவிக்கவும்.
இறந்ததாக பேசப்படும் ரகுமான் இறந்ததாகவே இருக்கட்டும்.
ஆம்ஸ்டர்டாமுக்கான இந்திய தூதர் ரகுமான், ரகு என்ற பெயரில் நாட்டை விட்டு செல்வது ரகசியமாக
இருப்பது இந்திய இறையாண்மைக்கு நல்லது.
அதுசரி, பாஸ்போர்ட் அதிகாரியை எப்படி
சமாளித்தீர்கள் ? என்று கேட்டார் வின்சென்ட்.
பாஸ்போர்ட்டின் கூடவே எனது உண்மையான பாஸ்போர்ட்டை நான்
கொடுத்ததை எனக்கு அடுத்து நின்ற பயனிகூட பார்த்திருக்க முடியாது.
சரி, உடன் வந்த அந்த செக்யூரிட்டியை
எப்படி கலற்றிவிட்டீர்கள் ?
அவருக்கு கொடுத்த பிரசாத பொட்டலத்தில் உள்ள ரகசிய செய்தியை அவர்
படித்தவுடன் அமைந்தியாக இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.
சரி, வின்சென்ட். பாவம் அந்த கும்பகோணத்து ஏழை “ரகு” யாரப்பா
?
நீங்கள் கொடுத்த விலாசத்தில்,
அவனது கிராமத்தில்
இருந்து காலை கிளம்பி இங்கு வருவதற்குள் உடல் சோர்வாகிவிட்டது.
அவனைப்போல ஒரு நாள் வாழ்வதே எனக்கு கடினம் ...
எப்படித்தான் அவன் அந்த வாழ்வை தினசரி வாழ்கிறானோ ?
சரி , அவன் இப்பொழுது எங்கே ?
எங்கோ மதுரையில் தமிழ் பட்டயப்படிப்பு படிக்க சென்றுள்ளான்
என்று கோப்பில் இருந்தது
அவனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் இருந்து அவனது முகவரியை
பெற்றோம்
அவனது பாஸ்போர்டை எதற்காக நாம் பயன்படுத்துகிறோம் ?
அவனது தோற்றமும் உங்களது தோற்றமும் ஒரே மாதிரியாக உள்ளது.
சரி, அவன் தனது பாஸ்போர்ட் கேட்டு வந்தால் என்ன
செய்வது ?
அவன் எப்படியும் பாஸ்போர்ட் கேட்டு வரமாட்டான்.
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் ?
தெரியாது சார், தமிழ் படிக்கும் மாணவன் அவனுக்கு
எதுக்கு பாஸ்போர்ட்.... சும்மா இந்த பசங்க இப்போவெல்லாம் ஒரு பேஷன் போல பாஸ்போர்ட்
வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
அத்தியாயம் – 1 - பகுதி – 4 Albert Fernando <albertgi@gmail.com>
tamil_ulagam@googlegroups.com 1st
Sep. 2013 - USA - 308 வார்த்தைகள் இணைய,
கதையின் தற்போதய நீளம் 1068 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
அப்போது வேகமாக
இரண்டு கைப்பெட்டிகளுடன் வாட்ட சாட்டமான ஒருவர் ஓடிவந்தார்.
"அய்யா நீங்க இரகுநாத்தானுங்களே!" என்று
மூச்சிறைக்கக் கேட்டார்.
இது என்ன
புதுக்குழப்பமா இருக்கு?
என்று ரகு என்கிற பெயரில் இந்திய இறையாண்மையை
பாதுகாக்கும் மகத்தான பணியில் பயணிக்கும் ரகுமானும் வின்செண்ட்டும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டனர்.
இந்த உளவுத்துறை
நமக்குத் தெரியாமலே இடைச் செருகலா இன்னொரு ஆளை அனுப்பிவிட்டதா? என்று பலவாறாக யோசித்துக் கொண்டிருந்த ரகுமான் சுதாரித்துக்கொண்டு பதில் சொல்லும் முன்
வந்தவர் மீண்டும் சொன்னார்.
"அய்யா, நான் இரகுராமன் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி."என்றவர் தன்
கைகளில் இருந்த இரண்டு பெட்டிகளையும் கீழே வைத்துவிட்டு ரகுமானின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.
"ஆமா, நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. ஆனால் ரெம்பத் தெரிந்தவர் மாதிரி உங்களைச்
சந்திச்சதுல மகிழ்ச்சி அப்படி இப்படின்னு சொல்றீங்களே.....!" என்று சொல்லி ரகுமான் இரகுராமனை ஏற இறங்கப் பார்த்தார்.
நீண்ட காற்சட்டை, முழுக்கை சட்டை கழுத்துப்பட்டை என்றெல்லாம்
அணிந்து மிடுக்காகக் காணப்பட்டார். அவர் சட்டையில் நறுமணப்பூச்சைத்
தெளித்திருப்பார் போலிருக்கு! அப்படி ஒரு வாசம் கொத்தாக வந்து நாசியில் நுழைந்தது.
நெற்றியில் பட்டை,
பட்டையாகத் திருநீறு வேறு அணிந்திருந்தார்.
ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் பட்டிக்காடும் இல்லாமல் நகர்ப்புறமுமில்லாமல் ஒரு
வினோதக் கலவையாக திகழ்ந்த ஆசாமியை அணுவணுவாக தன் மனத்தராசில் ரகுமான் எடைபோட்டுக்கொண்டிருந்தார்.
இப்போது, வின்செண்ட் தொண்டையைச் சற்றே செருமிக்கொண்டு
தன் பங்குக்கு ஒரு கேள்வியை இரகுராமன் மீது வீசினார்.
"நீங்க இவரை யாரோன்னு அடையாளம் தெரியாமல்
கூப்புட்டுட்டீங்கன்னு நெனைக்கிறேன்," என்றார்.
"ஏங்க, அடையாளம் தெரியாம அவரோட சரியான பெயரைச் சொல்லிக் கூப்புட முடியுமா?"
"ஆமால்ல...அப்ப உங்களுக்கு இவரைத்
தெரிஞ்சிருக்கு,
அவருக்கு உங்களைத் தெரியாது?!" அப்படித்தானே என்று வின்செண்ட் சற்றே அசடு வழிந்தார்.
அசடு வழியும்
அவருக்கும்,
ஆம்சுடர்டாமின் இந்திய தூதருக்கும் இன்னொரு
அணுகுண்டு வெடிக்கப் போகிறது என்பது அந்த நொடிவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நம் நாயகர் ரகுமானோ,
இரகுராமன் யாராக
இருக்கும்?
நம்மவராக
இருப்பாரோ?
இல்லை நம் பயண
விபரம் தெரிந்த எதிராளியின் பிம்பமா?
வரிசையில்
நின்றிருந்தபோது என்னை அவதானித்த சகபயணியா?
இவரா?
அவரா?
இப்படிப்
பலவாறாக எண்ணினார்,
ரகுமான்.
யாராக
இருந்தாலும் நிச்சயம் எதிராளியாக மட்டும் இருக்க முடியாது.
அந்தளவுக்கு
ஒவ்வொரு ஏற்பாட்டையும் கச்சிதமாக எவரும் அறிந்திடா வண்ணமாகவல்லவா
செய்திருக்கிறோம். இப்படிப்
பலவாறாக எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு திருவாளர் இரகுராமனுக்குப்
பதில் சொல்ல தன் திருவாயைத் திறக்க முற்பட்டபோதுதான்......."
"அவருடைய உண்மையான பெயரும் தெரியும், நிசப்பெயரும் தெரியும்ங்க...எனக்கு...!" என்று இரகுராமன் சொன்னபோது தான் இருவரும்
மிரண்டு போனார்கள்.
திருடனுக்கு
தேள் கொட்டியது போல என்பார்களே...அந்த நிலையில் இருந்தனர் இருவரும்!
நமக்கே தெரியாத
புது வில்லங்கமா இல்ல இருக்குன்னு இருவரும் நினைத்தாலும் வெளிப்படையா எதையும் கேட்க முடியாத இக்கட்டான
நிலைக்குப் போயினர்.
இருவருக்கும்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த அதிர்ச்சிக்கே சிகரம் வைத்தாற்போல
அடுத்ததாகவும் ஒன்று நடந்தது.
"இந்தாங்க உங்க கைப்பெட்டி..... "என்று
இரகுராமன் நீட்டிய பெட்டியைப் பார்த்த இருவரும் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றார்கள்.
அத்தியாயம் – 1 - பகுதி – 4
- Dr.Semmal naalayatamil@gmail.com
ariviyaltamilmandram@googlegroups.com - 02 Spetember 2013 India
, Chennai - 289 வார்த்தைகள் இணைய,
கதையின் தற்போதய நீளம் 1357 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
சட்டென இந்த சொற்றொடரை
கேள்வியுற்ற இருவரும் திகைத்து நின்றனர், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
என்ன சார் வின்சென்ட் ?,
இந்த ரகசிய பயணம் நமக்கு மட்டும்தானே
தெரியவேண்டும். இவருக்கு எப்படி தெரியும் ?
ரகுராமன் சார், நீங்க உளவுத்துறையில்
எந்த பிரிவினை சார்ந்தவர் ?
எப்படி உங்களுக்கு எங்களது
நடமாட்டம் தெரியும் ?
டெல்லியில் உள்ள தலைமை உளவுத்துறை
செயலகம் நேரடியாக உருவாக்கிய திட்டம் இது,
தமிழ்நாடு உளவுத்துறைக்கு கூட இந்த திட்டம் முழுவதுமாக தெரியாது....
நீங்க கேரளாவா, கர்நாடகமா ,
அல்லாத ஆந்திரா உளவுத்துறையா?
என்னப்பா சொல்றீங்க?
நீங்க உளவுத்துறையா?
அப்படினா, நீங்க போலீஸ் காரங்களா
?
அய்யோ சார், மன்னிச்சிருங்க
சார்.
எனக்கு ஒன்றும் தெரியாது சார்.
நீங்க ரெண்டு பேரும் வள்ளுவர்
டெலிவிஷன் நிறுவனம் செய்கின்ற ஒரு சிரிப்பு நிகழ்ச்சிக்கு நடிப்பவர்கள் என்று
நினைத்தேன்.
என்ன சார் உலர்றீங்க , என்ன
விளையாட்டா ? கோபமடைந்த ரகுமான் அருகில் நின்ற ரகுராமனை கண்டு விளாசினார்.
அதற்குள்ளாக, விமான நிறுவனம்
பயணிகளை அழைக்க துவங்கியது.
மிஸ்டர். ரகுராம் என்ன
சொல்கிறீர்கள் ?
சீக்கிரம் விளக்காமாக
சொல்லவும்.
என்ன சார் சீக்கிரம் எப்படி
சார் விளக்காமாக சொல்வது ? என்று திணறினார் ரகுராம்.
சார், நீங்க ஒரு தொலைக்காட்சி
நிகழ்வுக்காக ஒரு நாடகம் ஆடுவதாகவும். அதன்படி ஒரு மனிதர் வேறொரு நபரின்
பாஸ்போர்ட்டில் பயணிக்க முடியும் என்று நிரூபிக்கும் நிகழ்வு இது என்று என்னிடம்
அவர் சொன்னார்.
யார் அந்த “அவர்”?
அந்த பக்கத்துல நீல நிற
சட்டையில் வெள்ளை நிற பூ போட்ட அவர்தான் அப்படி சொன்னார், உங்களை அடையாளம் கண்டு
இந்த சூட்கேசை தருபவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மான தருவீர்கள் என்று சொன்னார்.
எங்கு “அவர்” கொஞ்சம் அந்த நபரை காட்டுங்கள் ?
அனைவரும் தேடினார்கள், அந்த
மர்ம நபர் யாருடைய கண்ணிலும் படவில்லை.
சார் எண்ணை விட்டுவிடுங்கள்,
நான் சும்மா காசு கிடைக்கும் என்று எண்ணி விளையாட வந்தேன். அய்யய்யோ !!! ,
புலம்பத் துவங்கினார் ரகுராம்.
அதற்குள்ளாக விமானம் ஏற கடைசி
அழைப்பு வரவே, விமானத்தை நோக்கி நடந்தார் ரகுமான்.
வின்சென்ட், இந்த இரண்டு
பைகளையும் நானே வைத்துக் கொள்கிறேன். இரண்டாவது பையில் அந்த மர்ம நபர் பற்றி
ஏதேனும் துப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும் என்றார் ரகுமான்.
முடியாது சார், இந்த இரண்டாவது
பையில் என்ன உள்ளது என்று முழுவதும் அறிந்துகொள்ளாமல் உங்களிடம் தர முடியாது.
நீங்க சென்று விமானத்தின் உள்ளே
அமருங்கள்.
நான் கொண்டுவந்து
கொடுக்கிறேன்.
விமானம் கிளம்ப இன்னும் முப்பத்திஏழு
நிமிடம் உள்ளது சார்.
சரி, இந்த ரகுராமை கொஞ்சம்
விசாரித்து பின்னர் ரிலீஸ் செய்யுங்கள்.
சொல்லிவிட்டு பதற்றத்துடன்
விமானைத்தை நோக்கி நடந்தார் ரகு என்னும் பெயரில் ரகசியமாக பயணிக்கும் ஆம்ஸ்ட்ர்டாம் நாட்டிற்கான
இந்தியாவின் தூதர் ரகுமான் I A S.
ஆமா, அவன் என்ன சொன்னான்?
இப்படியாக இரகுமான் இ.ஆ.ப., சிந்தித்துக்கொண்டே தன் இருக்கையைத்
தேடி விமானத்துக்குள் நகர்ந்துகொண்டிருந்தார்.
இதோ ஆயிட்டது சார்... சொல்லிக்கொண்டே அவசரமாக எதையோ இழுக்க அதன் ஜிப் திறந்துகொள்ள அதிலிருந்த புத்தகங்களெல்லாம் சிதறி இரகுமான் இ.ஆ.ப., மீது புத்தகாபிசேகம் பொழிந்தது.
அப்படி அவர் முகம் மாறக் காரணம், அந்த 37- சார்லி இருக்கையில் ஒருவர்
இன்றைக்கு நமக்கு பிரச்னை கொடுக்கவே ஒவ்வொரு ஆளா வர்றாங்களே...
உங்க பயணச் சீட்டை சரியாப் பாருங்க சார்..." என்றார் பதிலுக்கு!
அத்தியாயம் – 1 - பகுதி – 5 - Albert Fernando <albertgi@gmail.com>
tamil_ulagam@googlegroups.com 5th Sep. 2013 - USA - 265 வார்த்தைகள் இணைய, கதையின் தற்போதய நீளம் 1622 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு இரகுராமன் எங்கேயிருந்து மொளைச்சான்?
கொஞ்ச நேரம் நம்மையே ஆட்டம் காட்டீட்டுப் போயிட்டானே!
ஆமா, அவன் என்ன சொன்னான்?
"உங்க உண்மையான பெயரும் தெரியும், நிசப்பெயரும் தெரியும்ங்க..."
அப்டீன்னா?
உண்மையும் நிசமும் என்றால் ஒரே பொருள்தானே!
ஆகா! யானைக்கும் அடி சறுக்கும்ன்னு சொல்வாங்களே!
அதுபோல எவ்வளவோ விசயத்துல கவனமா இருந்துட்டு ஒரு துக்கடா பயலுகிட்ட போய் ஏமாந்திருக்கமே..."
இப்படியாக இரகுமான் இ.ஆ.ப., சிந்தித்துக்கொண்டே தன் இருக்கையைத்
தேடி விமானத்துக்குள் நகர்ந்துகொண்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையா நாம எடுத்துக்கிட்டு இனி இந்த
மாதிரி எவனும் வந்து தத்துப் பித்துன்னு உளறினாலும் நாமதான்
ரெம்பக் கவனமா இருக்க வேண்டும்... என்று தனக்குள் தன்னையும்
மீறி எழும் சிந்தனைகளை அசை போட்டுக்கொண்டே நகர்ந்தார், இரகுமான்.
மாதிரி எவனும் வந்து தத்துப் பித்துன்னு உளறினாலும் நாமதான்
ரெம்பக் கவனமா இருக்க வேண்டும்... என்று தனக்குள் தன்னையும்
மீறி எழும் சிந்தனைகளை அசை போட்டுக்கொண்டே நகர்ந்தார், இரகுமான்.
37- சார்லி .. எங்க இருக்கு....ம்ம்ம்ம்..இப்பத்தா ன் 17- எ வந்துருக்கா..... சார் பெட்டியை மேலே வச்சிட்டா கொஞ்சம் வழிவிடுங்களேன்....இரகுமான் இ.ஆ.ப., வழியை மறித்து நின்றுகொண்டு எதை நகர்த்தினால் இதை உள்ள திணிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த புண்ணியவாளனைக் கொஞ்சம் சினேக பாவனையில் கேட்டார்.
இதோ ஆயிட்டது சார்... சொல்லிக்கொண்டே அவசரமாக எதையோ இழுக்க அதன் ஜிப் திறந்துகொள்ள அதிலிருந்த புத்தகங்களெல்லாம் சிதறி இரகுமான் இ.ஆ.ப., மீது புத்தகாபிசேகம் பொழிந்தது.
ஒருவழியா புத்தகாபிசேகத்திலிருந்து விடுவித்துக்கொண்டு தன் இலக்கை நோக்கி முன்னேறினார்.
"கண்டேன் 37- சார்லி என்று இருக்கை அருகே நெருங்கியபோது இரகுமான் முகம் மாறியது.
அப்படி அவர் முகம் மாறக் காரணம், அந்த 37- சார்லி இருக்கையில் ஒருவர்
அமர்ந்திருந்ததுதான் காரணம்.
37-பிராவோ இருக்கையில் ஒரு இளம்பெண்ணும்,
37- அல்பா இருக்கையில் வயதான ஒருவரும் இருந்தனர்.
இன்றைக்கு நமக்கு பிரச்னை கொடுக்கவே ஒவ்வொரு ஆளா வர்றாங்களே...
இடம் மாறி உக்காந்துட்டாரோ? ம்ம்ம்..
அவரைக் கெளப்புற வழியைப் பார்ப்போம்,'என்று நினைத்துக்கொண்டே இருக்கை அருகே வந்து நின்றுகொண்டு மெதுவாகத் தொண்டையை செருமிக்கொண்டு சொன்னார்.
"சார்....37- சார்லி இருக்கை எனக்கானது.
உங்கள் இருக்கைக்கு மாறிக்கொள்கிறீர்களா?" என்று இரகுமான் பாவமாகக் கேட்டார்.
"என்ன? என் இடம் இதுதாங்க. 37சார்லி என்னுடைய இடத்தில்தான் நான் இருக்கேன்".
உங்க பயணச் சீட்டை சரியாப் பாருங்க சார்..." என்றார் பதிலுக்கு!
இரகுமான் வேறு வழியில்லாமல் அருகில் வந்த விமானப் பணியாளரிடம் தனது பயணச் சீட்டைக்காட்டி, நான் எங்கே அமர்வது? நீங்களே சொல்லுங்கள்..."என்றார்.
விமானப் பணியாளர் இரகுமானிடம் இருந்த பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு 37- சார்லியில் அமர்ந்திருந்த பயணியிடம், "உங்க பயணச் சீட்டைக் கொடுங்க சார்," என்று கேட்டு வாங்கினார்.
அந்தப் பயணச் சீட்டில்............
"இரகுநாத்" 37- சார்லி என்றிருந்தது.....!
அத்தியாயம் – 1 - பகுதி – 6 - Dr.Semmal naalayatamil@gmail.com
ariviyaltamilmandram@googlegroups.com - 100913 - 777 வார்த்தைகள் இணைய, கதையின் தற்போதய நீளம் 2399 வார்த்தைகளாக நீண்டுள்ளது.
சார், இந்த
இடம் எனக்குரியது... இழுத்து இழுத்தார் ரகுமான்.
என்ன சார் சொல்றீக, கோயம்பேடு பேரூந்து நிலையத்தில் ஏறிக்கொண்டு அமரும்
இடத்திற்கு அடம் பிடிப்பதை போல நடந்து கொள்கிறீர் ? என்று
உறுமிய அவர்.
சார், இது விமானம் சார், இங்கெல்லாம் அப்படி பேசக்கூடாது என்ற ஏதோ மன நோயாளியை பார்ப்பதை போல ரகுமானை
பார்த்தார்.
சார், இங்கே பாருங்கள் - என்னிடம் உள்ள கடவுச்சீட்டினை நன்றாக
பாருங்கள் என்று கூறியவாறு தன்னுடைய கடவுசீட்டினை எடுத்துக்காட்டினார் ரகுமான்.
அதற்குள்ளாக இந்த கலோபரத்தை கவனித்த விமான பணிப்பெண் கொடுத்த சமிக்ஞையின்
அடிப்படையில் விமானத்தின் பாதுகாவளுக்கு நின்ற பாதுகாவலர் உள்ளே வந்தார்.
இரண்டு பேருக்கு ஒரே இருக்கை எப்படி ஒதுக்கப்படும் சார் ?
ஏதோ தவறு நடந்துள்ளது...
சற்று நீங்கள் இரண்டு பேரும் வெளியே வாருங்கள் இவ்வாறு நடக்கவே வாய்ப்பு இல்லை – என்று கூறி பெரிய
குற்றவாளிகளை ஓரங்கட்டுவதை போல இருவரையும் வெளியே அழைத்தார் விமான செக்யூரிட்டி
அலுவலர்.
சார், இப்போது ஒரு கடின சூழலில் நீங்கள் இருவரும்
உள்ளீர்கள்.
நீங்கள் இருவரும் உங்கள் கைகளில் வைத்திருப்பது வெறுமனே விமான
சீட்டின் பதிவு சீட்டு மட்டுமல் – விமான நிறுவனத்தின் கணினி சற்றுமுன்னர் வெளியிட்ட
கடவுச்சீட்டுகள்.
ஒரே பெயரில், ஒரே இருக்கைக்கு
இரண்டு சீட்டுகள் எப்படி வெளியாகின என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்; தயவுசெய்து
நீங்கள் இருவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று விளக்கினார் மூத்த அதிகாரி.
சார், கொஞ்சம் தனியாக வாருங்கள் என்று அழைத்து
இந்திய அரசு அளித்த தனது ரகசிய குறியீடு அடங்கிய அடையாள அட்டையை அதிகாரியிடம்
காட்டினார் ரகுமான்.
சார், நீங்களுமா ?,
சற்று முன்னர்தான் உங்கள் இருக்கைக்கு அடம்பிடித்த அவரும் இப்படியானதொரு அடையாளத்தை காட்டினார்.
என்னதான் சார்
நடக்குது உங்கள் ரகசிய துறை அலுவகத்தில்
ஒரே பணியை செய்ய
ஒரே நாளில் இரண்டு ரகசிய நிகழ்வுகளை அரசு எப்படி செயல்படுத்தும் ? என்று நொந்து
கொண்டார் விமானத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி.
இன்றைய விமானத்தில்
மூன்று இருக்கைகளை இந்திய அரசின் உளவுத்துறை எடுத்துக்கொண்டது என்று எங்களுக்கு
தெரியும்.
ஆனால்,
ஒரே எண்ணில் அது எப்படி
ஏற்றது என்று எங்களுக்கு புரியவில்லை.
நாங்கள் இரண்டு இருக்கைகளை வேறு வேறு எண்களில் மட்டுமே
கொடுப்போம் – அது ஒரே எண்ணாக எப்படி மாறியது என்றுதான் தெரியவில்லை.
எங்கோ பெரிய தவறு
ஏற்பட்டுள்ளது.
இந்த குழப்பம்
முடிவுறும் வரை, ஏதோ இயந்திரக் கோளாறு என்று
சொல்லி விமானத்தை குறித்த நேரத்தில் செல்லவிடாமல் தடுப்போம்.
நீங்களும் உங்கள்
அலுவலக உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளவும்.
குழப்பம் உடனே
தீர்க்கப்படவேண்டும் - என்று நிலைமையை கவலையுடன் விளக்கினார் உயர் அதிகாரி.
சார், நீங்க எந்த
பிரிவினை சார்ந்தவர் என்று ரகுமான் வினவிய பொழுதுதான், அவரது பெயர் சுகுமார்
எனவும் அரசின் ரகசிய துறையின் ஒரு அங்கமான ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் இயங்கும்
ரகசிய துறை அதிகாரி எனவும் தெரிய வந்தது.
ரகுமான் என்னும்
இந்திய அரசின் வெளி உறவுத்துறை மூத்த அதிகாரியின் உயிருக்கு அபத்தத்தை ஏற்படுத்த
நினைத்த குழுவின் செயல்பாடுகளை முழுவதும் தெரிந்துகொள்ள ஜனாதிபதியின் நேரடி
உத்தரவின் பெயரில் அவர் வந்துள்ளதை அனைவரும் அறிந்துகொண்டனர்.
சார், அரசின்
இறையாண்மையை காக்க பாடுபடும் இரண்டு அரசின் ரகசிய நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று
தொடர்பில்லாமல் இயங்குவதால் இப்படியான குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று எனக்கு
தோன்றுகிறது.
சரி, ஏற்கனவே ஒரு
மணி நேரம் தாமதமாகியுள்ளது இனியும் தாமதம் செய்வது கூடாது.
இன்னொரு இருக்கை முதல்
வகுப்பில் காலியாக உள்ளது அங்கு வேண்டுமானால் ஒருவர் சென்று அமருங்கள் விமானத்தை முதலில்
கிளப்புவோம் – என்று கிராமத்து நாட்டாமை தீர்ப்பு சொல்வதை போல அதிபுத்திசாலித்தனமாக
யோசித்து பேசினார் வேறொரு பாதுகாப்பு அதிகாரி.
நீங்கள் வெறுமனே
இந்த விமானத்தின் பாதுகாப்பை பற்றி சிந்திப்பவர்கள் ஆனால் நாங்கள் இந்திய அரசின்
மூத்த அதிகாரிகள் – நமது நாட்டின் இறையாண்மையை சோதிக்கும் நிகழ்வு இது, அரசின்
இரண்டு ரகசிய துறைகள் எடுக்கும் முடிவுகளை
வெளியில் இருந்து நோட்டமிட்டுள்ள யாரோ இந்த குழப்பத்தை ஏற்படுத்தி
இருக்கலாம், நாங்கள் நேரிடையாக ஜனாதிபதியிடம் இதுபற்றி பேசி முடிவெடுக்க வேண்டும்
ஆகையினால் கொஞ்சம் எங்கள் இருவரையும் தனியாக பேச அனுமதி கொடுங்கள், தவறாக
நினைக்காதீர்கள் – என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு வேறு அறைக்கு ரகுமானும்,
சுகுமாரும் சென்றனர்.
சார், வெறுமனே இது
ஒரு தனி அதிகாரியின் தட்டச்சு பிழையாக இருக்கலாம் இல்லையா ? – என்று ஒரு
விளக்கத்தை கூறினார் விமான நிறுவன அதிகாரி.
தனி மனிதர் செய்து
தவறை கணிப்பொறி எப்படி அனுமதிக்கும் ? – என்று எதிர்வினாவை முன்வைத்தார் சுகுமார்.
கணிப்பொறியை அனுமதி கொடுக்க யார் சொல்லியுள்ளார்கள் ? என்று
சந்தேக தொனியில் உரைத்தார் ரகுமான்.
அந்த அளவுக்கு
கணிப்பொறி நுட்ப அறிஞர் யாராக இருக்கும் ? என்று வினவினார் காவல் அதிகாரி.
சார், அதுதான்
கேள்வியே – சற்று பொறுங்கள் – இங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டு அடுத்த அறையினுள்
சென்று கதவை தாழிட்டு ஜனாதிபதியுடன் தொலைபேசியில் இருவரும் பேசினர்.
சிறிது நேரம்
கழித்து இருவரும் வெளியில் வந்து.
பேசிவிட்டோம்.
உளவுத்துறையின்
முழுமையான செயல்பாடுகளை தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து இணையத்தளம் மூலமாக
யாரோ ஒருவன் கண்காணிப்பதாகவும் அவனை சீக்கிரத்தில் பிடிக்க ஏற்கனவே நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இந்த பயணத்தை
தடுக்க எதிரிகள் மேற்கொள்ளும் முயற்சி இது
அடுத்த இருபத்தி
நான்கு மணி நேரத்தில் இந்த குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த நபரை ரகசிய துறை
கண்டுபிடிக்கும் என்று ஜனாதிபதி நம்புவதாக தெரிவித்த ரகுமான் – நீங்கள் பாதுகாப்பு
அதிகாரியாக இருப்பினும் இந்த செய்திகளை இதற்கு மேல் உங்களிடம் பகிர்ந்துகொள்ள எங்களுக்கு
தடை உள்ளது என்றார்.
சரி, இப்போது நான்
என்ன செய்ய வேண்டும் என்று கடுப்பாகினார் அந்த விம்மான நிறுவன காவல் அதிகாரி.
எங்கள் இருவரையும்
பயணம் செய்ய அனுமதி கொடுங்கள் – 37 டெல்ட்டா இருக்கை காலியாக உள்ளது என்று எங்களுக்கு
செய்தி வந்துள்ளது அதனையும் எங்களுக்கு நீங்கள் தரவேண்டும் – சீக்கிரம் கடவுச்சீட்டினை
தயார் செய்யுங்கள் என்று அவசரப்பட்டார்
சுகுமார்.
எப்படியோ, நீங்கள்
இந்திய அரசின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்கியதாக
கூறும் பொழுது, எதிர்ச்சொல் சொல்ல ஒன்றும் கிடையாது.
“சற்று பொறுங்கள்
தருகிறேன்” என்று சொன்ன அவர் கணினியை சற்று நேரம் தானியங்கி நிலையில் இருந்து
அகற்றி தனது ஆளுகையின் கீழ் இயங்கும் கடவுச்சொல்லை பயன்படுத்தி கடவுச்சீட்டினை
அச்சடித்து தந்தார்.
வேகமாக இருவரும்
விமானத்தை அடைந்த நிலையில் சற்றும் தாமதிக்காமல் விமானம் புறப்பட தயாராகியது.
விமானத்தின்
கதவுகளை மூடுவதற்கு சற்று முன்னர், பாதுகாப்பு அதிகாரி விமானத்தை நோக்கி வேகமாக ஓடி
வருவதை கண்ட ரகுமான், எழுந்து கதவின் அருகில் சென்றார்.
என்ன சார், இப்போது
என்ன குழப்பம் ?
சார்.......
ஏற்கனவே இரண்டு கடவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன, நான் ஒன்றை கொடுத்தேன் – ஆகா மொத்தம் மூன்று.
ஒன்று நீங்கள், ஒன்று
சுகுமார், மற்றொன்று யார் சார் ?
இந்த விமானத்தில்
பயணிக்கும் பாதகாப்பு துறையை சார்ந்த அந்த ரகசிய அதிகாரி யார் ?
சார்........ என்ன
சொல்கிறீர் – மூன்றாவது அதிகாரியா ?
ஆம். இன்றைய
தினத்தில் இந்த விமானத்தில் மூன்று அதிகாரிகள் பயணிக்கிறார்கள்
ஒகே.
எப்படியும் அந்த
மர்ம நபர் இந்த விமானத்தின் உள்ளேதான் இருக்க வேண்டும்.
நாங்களும்
இங்கேதான் உள்ளோம்.
எங்களுக்கு விடப்பட்ட
சவால் இது.
என்று கூறும்
பொழுதே.....
விமானத்தின்
இயந்திரத்தை விமானி இயக்க துவங்க,ஏதும் தெரியாதது போல அமைதியாக வந்து இருக்கையில்
அமர்ந்தார் ரகுமான்.
சற்று நேரத்தில்
விமானம் பரக்கத்துவங்கியது.
ஆபத்தும்
அவர்களுடன் சேர்ந்து பரக்கத்துவங்கியது.
(தொடரும்)
The Game Course of the Story
Semmal from India (310813)
introduced the character of Raghu hailing from Kumbakonam, but the introduction
of the Diplomat tag and Amsterdam destination to the character by Kovai Selvan
from USA made the first twist in the story-line (310813).
On (020913) Albert Fernando from USA representing Tamil Ulagam Google Group added another character to the story, Raghuraman, this character moved the story into the next level. again Albert (050913) made a deeper twist to the story, from here on the story will move further.
Join the game and play it safe.....
On (020913) Albert Fernando from USA representing Tamil Ulagam Google Group added another character to the story, Raghuraman, this character moved the story into the next level. again Albert (050913) made a deeper twist to the story, from here on the story will move further.
Join the game and play it safe.....
Updated
at 05:00
GMT on 050913
Any
Member from any of the nine Google Groups can also join the game
As
on date the number of the authors for the story stands at - Three
1.
Semmal
- India – Representing – Ariviyal Tamil Mandram Google Group
2. Kovai Selvan – USA – Representing
– Representing tamizhsiragugal Google
Group
3.
Albert Fernando – USA – Representing – Representing Tamil
Ulagam Google Group