Visitors till now....

Wednesday, 28 August 2013

Universal Mentoring – நாளைய தமிழ் மாணவர் அறிவியல் இயக்கம்

எல்லா புகழும் இறைவனுக்கே
வணக்கம்
இணையத்தில் நான் உருவாக்கிவரும் மெய்நிகர் நூலகத்தினை வலம்வந்த நண்பர்கள் பலர், நூலகத்தில் இடம்பெறும் கட்டுரைகள் எங்கு எப்படி வெளியிடப்படும் என்று பலமுறை என்னிடம் கேட்டுள்ளனர்.
மாணவர்களிடம் மட்டுமே அந்த கட்டுரைகள் ஒப்படைக்கப்படும்.
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு அவை தமிழில் பெயர்க்கப்படும் என்று நான் கூறியுள்ளேன்.
இருப்பினும்,கட்டுரைகளை கண்ணில் காட்டாமல் வைப்பதால் என்மீது பலருக்கு கோபம் உள்ளதை நான் அறிவேன்.
நூலகத்தின் விதிமுறைகளை மீறுவதை என்னால் ஏற்க முடியாது.
இனி எனது மாணவர்கள் உருவாக்கிய கட்டுரைகள் ஒன்றின் பின் ஒன்றாக இந்த தளத்தில் வெளியாகும். 
கட்டுரைகளுக்கு உள்ளே செல்லும் முன்னர் ஒரு சிந்தனை பகிர்வு.......
அடிப்படையில் நான் ஒரு கல்வியாளர்
 கல்வி கற்பது ஒரு அழகான அனுபவம்  

கல்வியை கற்றுக் கொடுப்பது புனிதமான செயல் 

வெறுமனே மொழி மட்டும் வளர்வதால் எந்த பயனும் இல்லை 

மொழியும் , மொழியை பேசும் மக்களும் இனைந்து  வளர்வது அவசியம் 

தமிழ் மொழியும் , தமிழை தாய் மொழியாக பெற்ற மாணவர்களும் இனைந்து அறிவியல் பூர்வமாக பரிணமிக்க வேண்டும் 

இந்த உயரிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து என்னால் உருவாக்கப்பட்ட இயக்கம் "நாளைய தமிழ் மாணவர் அறிவியல் இயக்கம்"  

ஜூன் 2007 முதல் இன்றுவரை 148 மாணவர்களை இந்த இயக்கத்தின் மூலமாக தேசிய, சர்வதேச மாநாடுகளில் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் கட்டுரை வாசிக்க எனது இயக்கம் துணை புரிந்துள்ளது.




This website construction was initiated when the student count of the movement crossed the 148 mark, hence the articles from 1 to 148 will be aligned later only.

No comments:

Post a Comment